வருங்கால வைப்புநிதி அலுவலர் தேர்வை 62 பேர் எழுதினர்
வேலூரில் நடந்த வருங்கால வைப்புநிதி அலுவலர்களுக்கான தேர்வை 62 பேர் எழுதினார்கள். தேர்வு மையத்தை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார்.
வேலூர்
வேலூரில் நடந்த வருங்கால வைப்புநிதி அலுவலர்களுக்கான தேர்வை 62 பேர் எழுதினார்கள். தேர்வு மையத்தை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார்.
வருங்கால வைப்புநிதி அலுவலர் தேர்வு
மத்திய அரசின் பொது வருங்கால வைப்புநிதி துறையில் கணக்கு மற்றும் அமலாக்கப்பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று நடைபெற்றது.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த 121 பேர் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு தேர்வு எழுத வேலூர் ஊரீசு பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்வு காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெற்றது.
தேர்வர்கள் காலை 8 மணி முதல் தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினார்கள்.
தேர்வு மைய நுழைவுவாயிலில் பலத்த சோதனைக்கு பின்னரே தேர்வுகள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
கலெக்டர் நேரில் ஆய்வு
வருங்கால வைப்புநிதி அலுவலர்களுக்கான தேர்வை 62 பேர் மட்டுமே எழுதினார்கள். 59 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
தேர்வு மையத்தை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேர்வு மையத்தில் செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
ஆய்வின்போது தாசில்தார் பாலமுருகன் மற்றும் வருவாய்துறையினர் உடனிருந்தனர்.
தேர்வு மையம் மற்றும் தேர்வறை கண்காணிக்கும் பணியில் 20-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்தனர். தேர்வு மையத்தை சுற்றிலும் செல்போன் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. பள்ளி வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story