6 வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
வேலூர் மாவட்டத்தில் 6 வருவாய் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் 6 வருவாய் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
வேலூர் தாலுகா சத்துவாச்சாரி உள்வட்ட வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய வெங்கடேசன் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று அணைக்கட்டு தாலுகா அலுவலகத்துக்கும், அங்கு பணிபுரிந்த முதுநிலை வருவாய் ஆய்வாளர் திருகுமரேசன் வேலூர் கலெக்டர் அலுவலக நிலப்பிரிவுக்கும், குடியாத்தம் கிழக்கு உள்வட்ட வருவாய் ஆய்வாளர் செந்தில்குமரன் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று வேலூர் கலெக்டர் அலுவலக பொதுப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டார்.
அங்கு பணிபுரிந்த யுவராஜ் சத்துவாச்சாரி உள்வட்ட வருவாய் ஆய்வாளராகவும், கே.வி.குப்பம் உள்வட்ட வருவாய் ஆய்வாளர் ஆனந்தன் வடுகந்தாங்கல் உள்வட்ட வருவாய் ஆய்வாளராகவும், அங்கு பணிபுரிந்த மணிமேகலை கே.வி.குப்பம் உள்வட்ட வருவாய் ஆய்வாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி பிறப்பித்துள்ளார்.
Related Tags :
Next Story