விருப்பாட்சியில் நினைவு நாளையொட்டி கோபால்நாயக்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
விருப்பாட்சியில், கோபால்நாயக்கர் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் அர.சக்கரபாணி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
சத்திரப்பட்டி:
சுதந்திரத்திற்காக போராடி தனது இன்னுயிரை நீத்த கோபால்நாயக்கரை பெருமைப்படுத்தும் வகையிலும், அவரது புகழ் உலகிற்கு தெரிய வேண்டும் என்ற நோக்கத்துடனும் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள விருப்பாட்சி கிராமத்தில் அவரது உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2006-2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது இந்த மணிமண்டபம் கட்டப்பட்டது.
நேற்று கோபால்நாயக்கரின் நினைவு நாள் ஆகும். இதையடுத்து விருப்பாட்சியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு கோபால்நாயக்கரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன், ஒட்டன்சத்திரம் நகர தி.மு.க. செயலாளர் வெள்ளைச்சாமி, ஒன்றிய செயலாளர் தர்மராஜன், மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அசோக் வேலுச்சாமி மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story