கொடைக்கானலில் இந்து மக்கள் கட்சியினர் உண்ணாவிரதம்
கொடைக்கானலில் இந்து மக்கள் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
கொடைக்கானல்:
இந்து மக்கள் கட்சியினர் சார்பில் கொடைக்கானலில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த அனுமதிக்கக்கோரி நேற்று ஆனந்தகிரி மாரியம்மன் கோவில் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் இளைஞரணி மாநில செயலாளர் குமரன் தலைமை தாங்கினார். நகர தலைவர் கார்த்திக் முன்னிலை வகித்தார். நகர பொதுச் செயலாளர் ஆனந்த், பொருளாளர் சுரேஷ், மாவட்ட செயலாளர் சக்திதரன், நகர அமைப்பாளர் சவுந்தரபாண்டியன், நகர இளைஞரணி தலைவர் முத்து, செயலாளர் மணிகண்டன், பொருளாளர் செந்தில், நிர்வாகி சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன், இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து இந்து மக்கள் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, உண்ணாவிரதத்தை கைவிடும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து அவர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி, கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்திவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story