தூத்துக்குடி, காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்ற 6 வாலிபர்கள் கைது போலீசார் அதிரடி நடவடிக்கை
கஞ்சா விற்ற 6 வாலிபர்கள் கைது
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி கஞ்சா விற்ற 6 வாலிபர்களை கைது செய்தனர்.
கஞ்சா விற்பனையை
தடுக்க அதிரடி
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சந்தேகத்திற்கு இடமான பகுதிகளில் அதிரடி சோதனையும் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் போலீசார் நடத்திய சோதனையில் 6 வாலிபர்களை கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:
தூத்துக்குடியில்...
தூத்துக்குடி லயன்ஸ்டவுனை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மகன் கபில்குமார் (வயது 22). இவர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்தாராம். உடனடியாக தென்பாகம் போலீசார் கபில்குமாரை கைது செய்தனர். இதே போன்று புதுக்கோட்டை சாலையில் உள்ள காமராஜர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிவத்தையாபுரம் மேற்கு தெருவைச் சேர்ந்த தொம்மை பொன்ராஜ் மகன் பக்கிஸ் குமார் (26), தூத்துக்குடி முத்தம்மாள் காலனி பகுதியை சேர்ந்த அருள்ராஜ் ஆரோக்கியம் மகன் யோகராஜ் (31), சேர்வைகாரன்மடம் பகுதியைச் சேர்ந்த சந்தியாகு மகன் பாக்கியராஜ் (37) ஆகிய 3 பேரை புதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும் 2 வாலிபர்கள் கைது
மேலும் வீரபாண்டியபட்டினம் சண்முகபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் முத்துராஜா (22) மற்றும் காயல்பட்டினம் மேல நெசவு தெருவை சேர்ந்த சாகுல்ஹமீது மகன் அல்லாபிச்சை (25) ஆகியோரும் கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story