திருமுருகன் பூண்டி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயரும்போது பொதுமக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கும் என்று கலெக்டர் வினீத் கூறினார்.


திருமுருகன் பூண்டி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயரும்போது பொதுமக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கும் என்று கலெக்டர் வினீத் கூறினார்.
x
தினத்தந்தி 5 Sept 2021 9:39 PM IST (Updated: 5 Sept 2021 9:39 PM IST)
t-max-icont-min-icon

திருமுருகன் பூண்டி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயரும்போது பொதுமக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கும் என்று கலெக்டர் வினீத் கூறினார்.

அவினாசி:
திருமுருகன் பூண்டி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயரும்போது பொதுமக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கும் என்று கலெக்டர் வினீத் கூறினார்.
விளக்கக்கூட்டம்
திருமுருகன்பூண்டி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்துவது மற்றும் பழங்கரை ஊராட்சியை திருமுருகன்பூண்டி நகராட்சியுடன் இணைப்பது தொடர்பான விளக்க கூட்டம் நேற்று அவினாசியில் பெருமாநல்லூர் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கி பேசியதாவது:-
திருமுருகன்பூண்டி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி ஊராட்சி பகுதிகளை நகராட்சியாக தரம் உயர்த்துவதன் மூலமாக அணுகல் சாலைகள், இணைப்பு சாலைகள் மற்றும் உள்சாலைகள் போன்ற அனைத்து சாலைகளும் சாலை போக்குவரத்து அமைச்சகம் நிர்ணயம் செய்த தரத்துக்கு இணையாக உருவாக்கப்படும். தொழில்நுட்ப ரீதியாக சாத்தியக்கூறுகள் உள்ள இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு மழைநீர் அப்புறப்படுத்தப்படும். நகராட்சி விதிகளின்படி இரட்டை அகல சாலைகளுக்கு 30 மீட்டர் இடைவெளியில் தெருவிளக்கு அமைக்கப்படும். தினசரி சந்தை அமைத்துக்கொடுக்கப்படும்.
பொதுசுகாதாரம்
தரமான இறைச்சி உணவை பெற நவீன இறைச்சிக்கூடம் கட்டித்தரப்படும். அனைத்து பள்ளிகளும் நகராட்சி திட்டங்களுக்கு ஏற்ப தரம் உயர்த்தப்படும். ஆங்கிலவழி பள்ளிக்கூடங்களும் அமைக்கப்படலாம். பஸ் நிறுத்தம், கடைகள், காத்திருப்பு அறை, பொதுக்கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் நிறைந்த நிரந்தர பஸ் நிலையம் அமைத்து தரப்படும். தேவைப்பட்டால் எரிவாயு தகனமேடை அமைக்கப்படும். பூங்காக்களுக்கு கிடைக்ககூடிய நிலங்களில் நகர உருவாக்கத்துக்கு ஏற்ப அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படும்.
பேரூராட்சி, ஊராட்சி ஆகியவை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்போது, பொதுசுகாதாரத்துக்கு என தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும். சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் போன்ற பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படும். 250 வீடுகளுக்கு 2 தூய்மை பணியாளர்கள் வீதம் பணியமர்த்தப்பட்டு வீடுகள்தோறும் சென்று வாகனங்கள் மூலமாக குப்பையை தரம் பிரித்து சேகரிப்பார்கள். ஒரு கிலோ மீட்டர் ரோட்டுக்கு ஒருவர் நியமிக்கப்பட்டு சாக்கடை கால்வாய் மற்றும் துப்புரவு பணி மேற்கொள்ளப்படும்.
சுகாதார வசதிகள்
மக்கள் தொகைக்கு ஏற்ப நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்தப்பட்டு அங்கு மருத்துவ அலுவலர், நகர சுகாதார செவிலியர்கள், மருந்தாளுனர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். கொசு ஒழிப்பு பணிக்கு 300 வீடுகளுக்கு ஒருவர் நியமிக்கப்பட்டு நோய்பரவலை கட்டுப்படுத்துவார்கள். பிறப்பு, இறப்பு ஆகியவற்றை நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பதிவு செய்து, கணினி மென்பொருளில் பதிவேற்றம் செய்து, பொதுமக்கள் தேவைப்படும்போது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய வசதி செய்யப்படும். ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டப்படும். சுகாதார வசதிகளை மேம்படுத்துவதால் நகரின் சுற்றுப்புற சூழல் மேம்படுத்தப்பட்டு தூய்மையான சுகாதார சூழல் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
எதிர்ப்பு 
கூட்டத்தில் பொதுமக்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-
 திருமுருகன்பூண்டியில் அரசு மருத்துவமனை, கலைக்கல்லூரி, தீயணைப்பு நிலையம், பஸ் நிலையம் உள்ளிட்ட எந்த வசதியும் கிடையாது. அவினாசி பேரூராட்சி பகுதியில் அனைத்து வசதிகளும் உள்ளது. எனவே அவினாசி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி அதனுடன் பழங்கரை ஊராட்சியை இனைத்தால் பொதுமக்கள் அனைவருக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்கும்.  பழங்கரை ஊராட்சி மிகப் பெரிய ஊராட்சி ஆகும். 
எனவே பழங்கரை ஊராட்சியை பேரூராட்சி ஆக மாற்றலாம் அல்லது பழங்கரை | ஊராட்சியை 2 ஊராட்சியாக பிரிக்கலாம். பழங்கரை ஊராட்சியை பூண்டி நகராட்சியுடன் இனைத்தால் 100 நாள் வேலைவாய்ப்பு பாதிப்பு ஏற்படும். பசுமை வீடு திட்டத்தில் தொய்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பழங்கரை ஊராட்சியைபூண்டி நகராட்சியுடன் இணைக்கும் நடவடிக்கை மேற்கொண்டால் பொதுமக்கள் சார்பாக போராட்டம் நடைபெறும் நிலை ஏற்படும். எனவே பழங்கரை ஊராட்சி பூண்டி நகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். 
இவ்வாறு பொதுமக்கள் கூறினர். 
இந்த கூட்டத்தில் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சந்திரகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி, உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) வெங்கடேஷ், நகராட்சி நிர்வாக மண்டல செயற்பொறியாளர் முருகேசன், காங்கேயம் நகராட்சி ஆணையாளர் முத்துக்குமார், அவினாசி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) மகேஷ்வரி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பதாகை
 முன்னதாக பழங்கரை ஊராட்சி பகுதியை சேர்ந்த திரளான பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பழங்கரை ஊராட்சியை பூண்டி நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலமாக கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தனர். பின்னர் கையில் பதாகைகளுடன் கூட்டத்தில் அமர்ந்து இருந்தனர்.  

Next Story