குமரலிங்கம் பகுதியில் தொடர் மழையால் பயிர்கள் சேதமடைந்துள்ளது விவசாயிகளை வேதனையடைய செய்துள்ளது.


குமரலிங்கம் பகுதியில் தொடர் மழையால் பயிர்கள் சேதமடைந்துள்ளது விவசாயிகளை வேதனையடைய செய்துள்ளது.
x
தினத்தந்தி 5 Sep 2021 4:28 PM GMT (Updated: 2021-09-05T21:58:23+05:30)

குமரலிங்கம் பகுதியில் தொடர் மழையால் பயிர்கள் சேதமடைந்துள்ளது விவசாயிகளை வேதனையடைய செய்துள்ளது.

போடிப்பட்டி,
குமரலிங்கம் பகுதியில் தொடர் மழையால் பயிர்கள் சேதமடைந்துள்ளது விவசாயிகளை வேதனையடைய செய்துள்ளது.
அறுவடை நிலை
குமரலிங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் காய்கறிகள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதுதவிர மக்காச்சோளம், சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்களையும் மானாவாரி மற்றும் இறவைப் பாசனத்தில் சாகுபடி செய்துள்ளனர்.  கடந்த சில நாட்களாக மடத்துக்குளம் பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. 
இந்த மழையால் அறுவடை நிலையிலுள்ள பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
 காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காத நிலை உள்ளது. மேலும் இடுபொருட்கள், கூலி உள்ளிட்டவை பல மடங்கு அதிகரித்துள்ளதால் உற்பத்திச் செலவும் அதிகரித்துள்ளது. இது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெங்காயம் அழுகல்
 தற்போது மடத்துக்குளம், குமரலிங்கம் பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால் அறுவடை நிலையிலுள்ள பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சின்ன வெங்காயப் பயிர் அறுவடை நிலையில் மழை பெய்ததால் அழுகி வீணாகியுள்ளது. சின்ன வெங்காயத்தின் விலை ஏற்கனவே அதல பாதாளத்துக்குப் போயுள்ளது.ஒரு கிலோ சின்ன வெங்காயத்தை ரூ 10 க்கும் குறைவாக விற்பனை செய்யும் நிலை உள்ளது.  அறுவடை செய்யப்பட்ட அழுகல் வெங்காயத்தை வாங்க ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அறுவடைக் கூலி கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அதுபோல கம்பு சாகுபடியில் கதிர் முற்றி அறுவடைக்குத் தயாராக இருந்தது.
இந்தநிலையில் பெய்துள்ள மழையால் கம்பு நனைந்து முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.அறுவடை செய்த கம்பு கதிர்களிலுள்ள ஈரப்பதத்தின் காரணமாக எந்திரங்கள் மூலம் தானியங்களைப் பிரித்தெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மழை காரணமாக உலர வைக்கவும் முடியாமல் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு விவசாயிகள் தொடர் இழப்பை சந்திப்பது வேதனையளிப்பதாக உள்ளது.
இவ்வாறு அவர்கள்  கூறினர்

Next Story