பல்லடம், கூலி உயர்வு பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்படாவிட்டால், வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்து இருப்பதாக விசைத்தறியாளர்கள் கூட்டு கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்


பல்லடம், கூலி உயர்வு பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்படாவிட்டால், வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்து இருப்பதாக விசைத்தறியாளர்கள் கூட்டு கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 5 Sep 2021 4:31 PM GMT (Updated: 5 Sep 2021 4:31 PM GMT)

பல்லடம், கூலி உயர்வு பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்படாவிட்டால், வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்து இருப்பதாக விசைத்தறியாளர்கள் கூட்டு கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்

பல்லடம், 
பல்லடம், கூலி உயர்வு பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்படாவிட்டால், வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்து இருப்பதாக விசைத்தறியாளர்கள் கூட்டு கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 கூட்டு கமிட்டி கூட்டம்
 பல்லடத்தில், திருப்பூர், கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க, கூட்டு கமிட்டி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கத் தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினார். சோமனூர் சங்க தலைவர் பழனிச்சாமி, வேலம்பாளையம் சங்க தலைவர் பத்மநாபன், கண்ணம்பாளையம் சங்க தலைவர் செல்வகுமார், முன்னிலை வகித்தனர். பல்லடம் சங்க நிர்வாகி பாலாஜி வரவேற்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
கூலி உயர்வு குறித்த பேச்சுவார்த்தை, திருப்பூர், கோவை மாவட்டங்களில் தொழிலாளர் நலத்துறை ஆணையாளர்கள் முன்னிலையில்  6 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஜவுளி உற்பத்தியாளர்கள்  கலந்து கொள்ளவில்லை. இதனை கூட்டு கமிட்டி கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
அடுத்து நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு கூலி உயர்வு வழங்க வேண்டும்.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  நடவடிக்கை எடுத்து, விசைத்தறியாளர்களின் கூலி உயர்வு பேச்சுவார்த்தையை, திருப்பூர், கோவை 2 மாவட்ட கலெக்டர்கள் தலைமையில்  நடத்த உத்தரவிட வேண்டும். 
மேலும் ஜவுளி உற்பத்தியாளர்களை அழைத்து, பேச்சுவார்த்தையை நடத்தி கூலி உயர்வினை, நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும்.  இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (இன்று) கோவை தொழிலாளர் நலத் துறை கூடுதல் ஆணையரை, சந்தித்து  முறையிடப்படும். 
வேலைநிறுத்தம்
 காலம் தாழ்த்தினால்  திருப்பூர், கோவை 2 மாவட்டங்களிலுள்ள சுமார் இரண்டரை லட்சம் விசைத்தறிகளை நிறுத்தி, வேலைநிறுத்தம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. எனவே தேவைப்பட்டால் விசைத்தறிகளை நிறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது.என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 கூட்டத்தில், விசைத்தறியாளர்கள் சங்க சோமனூர் சங்கப் பொருளாளர் பூபதி, மங்கலம் சங்க செயலாளர் பழனிச்சாமி, தெக்கலூர் சங்க துணைத்தலைவர் பொன்னுசாமி, அவிநாசி சங்க செயலாளர் செந்தில்குமார், பல்லடம் பொருளாளர் முத்துக்குமாரசாமி, நிர்வாகி பூபதி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story