அரூர் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் சாவு
அரூர் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் இறந்தான்.
அரூர்:
அரூர் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் இறந்தான்.
மின்சாரம் தாக்கியது
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பாப்பண்ணா வலசு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் அறிவழகன் (வயது 6). சிறுவன் நேற்று முன்தினம் வீட்டு அருகே விளையாடி கொண்டு இருந்தான். அப்போது அங்கிருந்தமின் சுவிட்சை போட்ட போது திடீரென சிறுவனை மின்சாரம் தாக்கியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவனை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
இதனால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சிறுவனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து அரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விசாரணை
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்குச் சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுவன் இறந்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி சிறுவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story