லாரியில் இருந்து தவறி விழுந்த டிரைவர் சாவு


லாரியில் இருந்து தவறி விழுந்த டிரைவர் சாவு
x
தினத்தந்தி 6 Sept 2021 12:02 AM IST (Updated: 6 Sept 2021 12:02 AM IST)
t-max-icont-min-icon

லாரியில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

கீரமங்கலம்:
கீரமங்கலத்தில் மிளகாய் மொத்த வியாபாரிகள் உள்ளதால் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் தினசரி லாரிகளில் மிளகாய் கொண்டு வந்து இறக்கப்படுவது வழக்கம். அதே போல நேற்று ஒரு மொத்த வியாபாரிக்கு ஒரு லாரியில் மிளகாய் மூட்டைகளை விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா ஓமேட்டுப்பட்டி மேலத்தெருவைச் சேர்ந்த டிரைவர் கருப்பச்சாமி (வயது 60) கொண்டு வந்தார். பின்னர் அவர் லாரியின் மேல் ஏறி தார்ப்பாயை அவிழ்த்து விட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தவறி கீழே விழுந்தார். இதையடுத்து அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து கீரமங்கலம் போலீசார் கருப்பசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story