பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
x
தினத்தந்தி 5 Sep 2021 6:34 PM GMT (Updated: 2021-09-06T00:04:40+05:30)

பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

விராலிமலை:
விராலிமலை தாலுகா அகரப்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அகரப்பட்டி செல்லும் வழியில் செங்கல் காளவாய் அருகே 11 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். போலீசார் வருவதை பார்த்த 5 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து அங்கிருந்த திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா ஊத்துக்குளியை சேர்ந்த ராஜகோபால் (வயது 65), தேனூரை சேர்ந்த இளையராஜா (39), குமார் (50), இலுப்பூர் தாலுகா திருநல்லூரைச் சேர்ந்த மகாராஜா (43), மலைக்குடிப்பட்டியை சேர்ந்த தமிழன் (50), இலுப்பூரை சேர்ந்த ஆனந்தன் (39) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூ.17 ஆயிரத்து 520-ஐ பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story