கொரோனாவுக்கு மேலும் 2 பேர் புதிதாக 23 பேருக்கு தொற்று


கொரோனாவுக்கு மேலும் 2 பேர்  புதிதாக 23 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 5 Sep 2021 6:34 PM GMT (Updated: 2021-09-06T00:04:47+05:30)

கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகினர்.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிற நிலையில் இறப்பு எண்ணிக்கையும் அவ்வப்போது அதிகரிக்கிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 218 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் 23 பேர் குணமடைந்தனர். இதனால் மாவட்டத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 562 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மாவட்டத்தில் தற்போது 262 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 394 ஆக உயர்ந்துள்ளது.
ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்தில் புதிதாக 14 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதியானதால் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story