வேளாண்மை கல்லூரி அமைத்துத்தர வேண்டும் கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
வேளாண்மை கல்லூரி அமைத்துத்தர வேண்டும் என கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வேப்பந்தட்டை
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்டார பேரவைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார செயலாளர் கோகுலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் ஏழுமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்லதுரை, கலையரசி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் 60 ஆண்டுகால கனவு திட்டமான சின்னமுட்லு நீர்த்தேக்க திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். வேப்பந்தட்டையில் வேளாண்மைக் கல்லூரி அமைத்து தரவேண்டும். வேப்பந்தட்டையில் தாலுகா தலைமை மருத்துவமனை, காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் போன்ற அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும்.
வாலிகண்டபுரம், வி.களத்தூர், கை.களத்தூர் ஆகிய ஊராட்சிகளை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். கிருஷ்ணாபுரம் அருகே வெள்ளாற்றில் தடுப்பணை கட்டி ஏரியை மராமத்துப்பணி செய்திடவேண்டும். வேப்பந்தட்டை பகுதியில் தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக வட்டகுழு உறுப்பினர் முருகேசன் வரவேற்றுப்பேசினார். முடிவில் கோவிந்தன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story