அரசு ஊழியர்கள் சங்க வட்டார மாநாடு


பெரம்பலூர்
x
பெரம்பலூர்
தினத்தந்தி 5 Sep 2021 6:57 PM GMT (Updated: 2021-09-06T00:27:12+05:30)

வேப்பந்தட்டையில் அரசு ஊழியர்கள் சங்க வட்டார மாநாடு நடைபெற்றது.

வேப்பந்தட்டை
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் வட்டார மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு அரசு ஊழியர் சங்கத்தின் வட்டார துணை தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குமரிஅனந்தன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாநாட்டில் அரசு ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் இளங்கோவன், சிவகுமார், சுப்பிரமணியன், ராஜராஜன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாநாட்டில் மறுக்கப்பட்ட அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த மாநாட்டில் அரசு ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக உறுப்பினர் குமார் வரவேற்று பேசினார். முடிவில் வட்டார பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.

Next Story