கொரோனா தடுப்பூசி முகாம்


அரியலூர்
x
அரியலூர்
தினத்தந்தி 6 Sept 2021 12:46 AM IST (Updated: 6 Sept 2021 12:46 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

அரியலூர்
அரியலூர் ஏ.பி.என். ஜவுளி ஸ்டோர் நிறுவனமும், நகராட்சி மருத்துவ சுகாதார துறையும் இணைந்து கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தியது. அரியலூர் பெருமாள் கோவில் தெருவில் நடந்த முகாமை ஏ.பி.என். சுதாகர் தொடங்கி வைத்தார். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முகிலன் கலந்து கொண்டு தடுப்பூசி போட வந்தவர்களுக்கு பரிசோதனை செய்தார். தொடர்ந்து வணிக நிறுவனங்களில் பணி புரிபவர்கள், பொதுமக்கள் என 150 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் நகராட்சி ஆணையர் தமயந்தி மற்றும் தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story