மோட்டார் சைக்கிளை திருடிய 2 பேர் கைது


மோட்டார் சைக்கிளை திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 6 Sept 2021 1:27 AM IST (Updated: 6 Sept 2021 1:27 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிளை திருடிய 2 பேர் கைது

ஊட்டி

ஊட்டியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் கமர்சியல் சாலையோரத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். இதை நோட்டமிட்ட 2 ஆசாமிகள், அந்த மோட்டார் சைக்கிளை திருடிக்கொண்டு தப்பி செல்ல முயன்றனர். உடனே அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த போலீசார் கையும், களவுமாக அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

 விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம், கோவை மாவட்டத்தை சேர்ந்த செல்லப்பாண்டி ஆகிய 2 பேர் என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story