நெல்லையப்பர் கோவில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்


நெல்லையப்பர் கோவில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
x
தினத்தந்தி 5 Sep 2021 8:33 PM GMT (Updated: 2021-09-06T02:03:36+05:30)

நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நெல்லை:
நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நெல்லையப்பர் கோவில்

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுக்கு 12 மாதமும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் ஆவணி மாதம் வரக்கூடிய மூலத் திருநாளில் சுவாமி நெல்லையப்பர் கருவூர் சித்தருக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறும். இந்த திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான கொடியேற்று விழா நெல்லையப்பர் கோவில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை, கஜபூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கொடி பல்லக்கில் வைக்கப்பட்டு கோவில் பிரகாரத்தில் வலம் வர எடுத்துவரப்பட்டது.

கொடியேற்றம்

இதை தொடர்ந்து சுவாமி சன்னதி முன் மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அங்கு வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. 16 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் கொேரானா வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக பக்தர்கள் அனுமதி இல்லை. திருவிழாவின் முக்கிய நிகழ்வான கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி 15-ந்தேதி நடைபெறுகிறது.

Next Story