கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில் புதிதாக 5,000 ஆசிரியர்கள் நியமனம் - பசவராஜ் பொம்மை அறிவிப்பு


கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில் புதிதாக 5,000 ஆசிரியர்கள் நியமனம் - பசவராஜ் பொம்மை அறிவிப்பு
x
தினத்தந்தி 6 Sept 2021 2:23 AM IST (Updated: 6 Sept 2021 2:23 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில் புதிதாக 5,000 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

பெங்களூரு:

கேள்வி கேட்கும் மனநிலை

  கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தின விழா நேற்று பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு, சிறப்பாக பணியராற்றி வருபவர்களுக்க ஆசிரியர் விருது வழங்கி பேசும்போது கூறியதாவது:-

  21-வது நூற்றாண்டு அறிவார்ந்த நூற்றாண்டு. அறிவாற்றால் அறிவியல், அறிவியலால் தொழில்நுட்பத்தை நோக்கி நமது நாடு சென்று கொண்டிருக்கிறது. இந்த வேகத்திற்கு தக்கபடி ஆசிரியர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். நல்ல மாணவர்களாக இருந்தால் தான் நல்ல ஆசிரியர்களாக வர முடியும். மாணவர்களிடம் கேள்வி கேட்கும் மனநிலையை உருவாக்கி அவற்றை அறிந்துகொள்ள ஊக்கம் கொடுப்பே நல்ல அற்புதமான ஆசிரியர்.

5,000 ஆசிரியர்கள் நியமனம்

  கர்நாடகத்தில் புதிய தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள் தங்களின் ஆலோசனைகள், சந்தேகங்களை கூற வேண்டும். மாணவர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த கல்வி கொள்கையை வெற்றிகரமாக அமல்படுத்த ஆசிரியர் சமுதாயம் உதவ வேண்டும். கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில் தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் புதிதாக 5,000 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

  அதைத்தொடர்ந்து பேசிய பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ், "புதிய தேசிய கல்வி கொள்கை, இந்தியாவுக்கு சுயமரியாதை, தன்னிறைவு சமுதாயத்தை உருவாக்க உதவும். கொரோனா நெருக்கடி காலத்தில் குழந்தைகள் பாதிக்கப்படாமல் கற்பிப்பு பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். அதே போல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வையும் வெற்றிகரமாக நடத்த உதவினர். அவர்களின் இந்த பணி பாராட்டுக்குரியது" என்றார்.

Next Story