காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு-வினாடிக்கு 22 ஆயிரத்து 875 கனஅடி தண்ணீர் வருகிறது
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 22 ஆயிரத்து 875 கன அடி தண்ணீர் அணைக்கு வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 22 ஆயிரத்து 875 கன அடி தண்ணீர் அணைக்கு வருகிறது.
கனமழை
தமிழகம், கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 670 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 22 ஆயிரத்து 875 கனஅடியாக அதிகரித்தது.
நீர்மட்டம் உயருகிறது
அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 5 ஆயிரத்து 650 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரம் கன அடிக்கு மேல் அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவை விட திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைவாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது. இதன்படி நேற்று முன்தினம் 69.39 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 71.10 அடியாக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story