மாமல்லபுரத்தில் சிக்னல் கோளாறால் ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்ய முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதி
மாமல்லபுரத்தில் சிக்னல் கோளாறால் ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்ய முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதி.
சென்னை,
மாமல்லபுரத்தில் நேற்று அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடற்கரை கோவில், வெண்ணை உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன மையங்கள் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டியது. வெண்ணை உருண்டைக்கல், கடற்கரை கோவில் உள்ளிட்ட நுழைவு வாயில் மையங்களில் செல்போன் சிக்னல்கள் சரியாக கிடைக்காமல் ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்ய முடியாமல் சுற்றுலா பயணிகள் பரிதவித்தனர். சிக்னல் கிடைக்கும் வரை காத்திருந்து அங்குள்ள கியூ-ஆர் பார்கோடு பலகையில் ஸ்கேன் செய்து டிக்கெட்டை பதிவு செய்து புராதன சின்னங்களை பார்த்து விட்டு சென்றனர்.
ஆன்ட்ராய்டு மொபைல் போன்கள் இல்லாத பயணிகள், மற்றவர்கள் உதவியை நாடி அவர்களிடம் ரூ.40 கொடுத்து ஆன்லைன் டிக்கெட் பதிவிறக்கம் செய்து சென்றனர். எனவே தொல்லியல் துறை நிர்வாகம் நுழைவு சீட்டு மையங்களில் வழக்கம்போல் கம்ப்யூட்டர் மூலம் நுழைவு டிக்கெட் வழங்கவேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story