வேங்கைவாசல் ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு


வேங்கைவாசல் ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 Sep 2021 3:15 AM GMT (Updated: 6 Sep 2021 3:15 AM GMT)

சென்னையை அடுத்த சேலையூர் அருகே வேங்கைவாசல் ஊராட்சியில் உள்ள ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் திடீரென செத்து மிதந்தன.

தாம்பரம்,

சென்னையை அடுத்த சேலையூர் அருகே வேங்கைவாசல் ஊராட்சியில் உள்ள ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் திடீரென செத்து மிதந்தன. இதை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நன்றாக இருந்த மீன்கள் திடீரென செத்து மிதப்பதால் ஏரியில் விஷத்தன்மை வாய்ந்த அமிலத்தை யாரேனும் கலந்திருப்பார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் செத்து மிதக்கும் மீன்களால் அந்த பகுதியில் துர்நாற்றமும் வீசியது.

எனவே ஏரியில் செத்து கிடக்கும் மீன்களை உடனடியாக அகற்றி, தண்ணீரை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கொத்து கொத்தாக ஆயிரக்கணக்கான மீன்கள் ஒரே நேரத்தில் திடீரென செத்து கிடப்பது குறித்தும், அதற்கு காரணமானவர்கள் குறித்தும் விசாரித்து, சம்பந்தபட்டவர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Next Story