தமிழகத்துக்கு முதன் முறையாக ஒரே நாளில் 19 லட்சத்து 22 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தன


தமிழகத்துக்கு முதன் முறையாக ஒரே நாளில் 19 லட்சத்து 22 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தன
x
தினத்தந்தி 6 Sept 2021 8:49 AM IST (Updated: 6 Sept 2021 8:49 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

ஆலந்தூர்,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 3 கோடியே 31 லட்சத்து 42 ஆயிரத்து 480 தடுப்பூசிகள் வந்து உள்ளன.

இந்த நிலையில் நேற்று மதியம் புனேவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 75 பெட்டிகளில் 9 லட்சம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகளும், மாலையில் புனேவில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் 86 பெட்டிகளில் 10 லட்சத்து 22 ஆயிரத்து 80 ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகளும் வந்தன.

தமிழகத்துக்கு முதன் முறையாக ஒரே நாளில் வந்த 19 லட்சத்து 22 ஆயிரத்து 80 தடுப்பூசிகள் தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.

Next Story