அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு


அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
x
தினத்தந்தி 6 Sept 2021 12:48 PM IST (Updated: 6 Sept 2021 12:48 PM IST)
t-max-icont-min-icon

அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு தாசில்தார் நடவடிக்கை.

திருவள்ளூர்,

திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் சிறுவானூர் ஊராட்சிக்குட்பட்ட வேடங்கிநல்லூர் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்க அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் புறம்போக்கு நிலம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் அந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து பிளாட் போட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயல்வதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்திற்கு திருவள்ளுர் தாசில்தார் ஏ.செந்தில்குமார் தலைமையில் சென்ற அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி 5 ஏக்கர் நிலத்தை மீட்டனர். மேலும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது மண்டல துணை வட்டாட்சியர் சரண்யா, வருவாய் ஆய்வாளர் கவுதம், கிராம நிர்வாக அலுவலர் பாத்திமா முத்து ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story