சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மெக்கானிக்கிற்கு ஆயுள் தண்டனை
திருப்பத்தூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மெக்கானிக்கிற்கு ஆயுள்தண்டனை விதித்து வேலூர் மாவட்ட போக்சோ கோர்ட்டு நீதிபதி ரவி தீர்ப்பு அளித்தார்.
வேலூர்
திருப்பத்தூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மெக்கானிக்கிற்கு ஆயுள்தண்டனை விதித்து வேலூர் மாவட்ட போக்சோ கோர்ட்டு நீதிபதி ரவி தீர்ப்பு அளித்தார்.
சிறுமி பாலியல் பலாத்காரம்
திருப்பத்தூர் மாவட்டம் சின்னசமுத்திரம் அருகே உள்ள கொடுமாம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் என்ற தங்கராஜ் (வயது 29), இருசக்கர வாகன மெக்கானிக்.
இவர் கடந்த 2013-ம் ஆண்டு 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சில மாதங்களுக்கு பின்னர் சிறுமிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.
அதையடுத்து அவரின் பெற்றோர் சிகிச்சைக்காக சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவ பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து சிறுமி நடந்த சம்பவங்களை பெற்றோரிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவர்கள், கிருஷ்ணராஜிடம் சென்று மகளை திருமணம் செய்து கொள்ளும்படி கூறி உள்ளனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து கிருஷ்ணராஜை கைது செய்தனர்.
ஆயுள்தண்டனை
இந்த வழக்கின் விசாரணை வேலூர் மாவட்ட போக்சோ கோர்ட்டில் நடந்தது. இதற்கிடையே சிறுமிக்கு ஆண்குழந்தை பிறந்தது. இந்த வழக்கின் இறுதிவிசாரணை இன்று நடைபெற்றது. அரசு தரப்பில் வக்கீல் சந்தியா ஆஜராகி வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னர் நீதிபதி ரவி தீர்ப்பு வழங்கினார்.
அதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக கிருஷ்ணராஜிக்கு ஆயுள்தண்டனையும், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியதற்காக ஓராண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்தும்படியும், தண்டனையை அவர் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதையடுத்து போலீசார் பலத்த காவலுடன் கிருஷ்ணராஜை வேனில் வேலூர் மத்திய ஜெயிலுக்கு அழைத்து சென்றனர்.
Related Tags :
Next Story