ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று காலை காத்திருப்பு போராட்டம் நடந்தது அப்போது 100 நாள் வேலைத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேரம் மட்டுமே வேலை வழங்க வேண்டும், அவர்களுக்கு என தனி கார்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து தாசில்தார் திருமுருகன் தலைமையில் வருவாய் துறையினர் மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தீர்வு காணப்படவில்லை. இதையடுத்து தேனி மாவட்ட சப்-கலெக்டர் ரிஷப் சம்பவ இடத்திற்கு வந்து மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் தாசில்தார், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் ஞான திருப்பதி, சுபாஷ்சந்திரபோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சப்-கலெக்டர் கூறினார். இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story