தூத்துக்குடியில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கொரோனாவால் உயிரிழந்த பணியாளர்களுக்கு நிவாரண உதவி மற்றும் வாரிசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை மண்டல தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில இணை பொதுச்செயலாளர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கண்ணையன் முன்னிலை வகித்தார்.
கோஷம்
ஆர்ப்பாட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மாநில துணைத்தலைவர் மரகதலிங்கம், மாநில செயலாளர் முருகானந்தம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story