கே.வி.குப்பம் அருகே கோவில் உண்டியல் திருட்டு


கே.வி.குப்பம் அருகே கோவில் உண்டியல் திருட்டு
x
தினத்தந்தி 6 Sept 2021 9:36 PM IST (Updated: 6 Sept 2021 9:36 PM IST)
t-max-icont-min-icon

கோவில் உண்டியல் திருட்டு

கே.வி.குப்பம்

கே.வி.குப்பத்தை அடுத்த பி.கே.புரம் நீலகண்ட பாளையத்தில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு பக்தர்கள் காணிக்கை செலுத்த உண்டியல் வைத்து இருந்தனர். இந்தநிலையில் மர்ம நபர்கள்யாரோ உண்டியலை திருடிச்சென்று விட்டனர். கோவில் நிர்வாகிகள் உண்டியலை தேடியபோது கோவில் அருகில் உள்ள வயல் வெளியில் உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் பக்தர்கள் செலுத்தியிருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.  
இது குறித்து கோவில் நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் கே.வி.குப்பம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story