பழனியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


பழனியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 6 Sept 2021 10:21 PM IST (Updated: 6 Sept 2021 10:21 PM IST)
t-max-icont-min-icon

பழனியில் ஆக்கிரமிப்புகளை போக்குவரத்து போலீசார் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

பழனி : 

பழனி நகரில், திண்டுக்கல் சாலையில் வணிக நிறுவனங்கள் ஏராளமாக உள்ளதால் வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும். ஆனால் அந்த சாலையின் ஓரத்தில் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். 

இதையடுத்து பழனி போக்குவரத்து போலீசார் சார்பில் திண்டுக்கல் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி தலைமையில் போலீசார் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதற்கிடையே ஒருசிலர் தாமாக முன்வந்து கடையின் முன்பு நீட்டிப்பு செய்திருந்த மேற்கூரையை அகற்றி, பொருட்களை எடுத்து கொண்டனர். 

பின்னர், சாலையோரம் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து போக்குவரத்து போலீஸ் சார்பில் குளத்து ரவுண்டானா சாலையில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அப்போது, அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து இன்ஸ்பெக்டர் விளக்கி கூறினார். 

Next Story