காய்கறி மார்க்கெட்டின் கடை மேற்கூரை இடிந்து விழுந்தது


காய்கறி மார்க்கெட்டின் கடை மேற்கூரை இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 6 Sept 2021 11:21 PM IST (Updated: 6 Sept 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டியில் காய்கறி மார்க்கெட்டின் கடை மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனை மாரிமுத்து எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் காய்கறி மார்க்கெட்டின் கடை மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனை மாரிமுத்து எம்.எல்.ஏ. பார்வையிட்டார். 
மேற்கூரை இடிந்து விழுந்தது
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் காய்கறி மார்க்கெட் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு 40 காய்கறி கடைகள் இயங்கி வந்தன. இந்தநிலையில் கட்டிடத்தின் மேற்கூரை பழுதடைந்த நிலையில் காணப்பட்டது.  இதனால் காய்கறி கடை வைத்திருப்பவர்கள் இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். 
இந்தநிலையில் நேற்று சுப்பிரமணியன் என்பவரின் கடை மேற்கூரை இடிந்து விழுந்தது.  
புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை
தகவல் அறிந்ததும் தி.மு.க. நகர செயலாளர் பாண்டியன், நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் அருள்முருகன், மாரிமுத்து எம்.எல்.ஏ, ஊராட்சி ஒன்றிய தலைவர் பாஸ்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் ரகுராமன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிந்து விழுந்த இடத்தை பார்வையிட்டனர்.
அப்போது  விரைவில் இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாரிமுத்து  எம்.எல்.ஏ. கூறினார்.

Next Story