கால்பந்து போட்டியில்வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு


கால்பந்து போட்டியில்வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
x
தினத்தந்தி 7 Sept 2021 12:12 AM IST (Updated: 7 Sept 2021 12:12 AM IST)
t-max-icont-min-icon

கால்பந்து போட்டியில்வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

கோட்டைப்பட்டினம்:
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் இளைஞர்களால் கால்பந்து போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இந்த போட்டியில் முதல் பரிசு ரூ.10 ஆயிரத்தை ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அணியும், இரண்டாம் பரிசு ரூ.8 ஆயிரத்தை கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த அணியும், மூன்றாம் பரிசு ரூ.6 ஆயிரத்தை கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த அணியும் பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு தொகையும், கோப்பையும் வழங்கப்பட்டது. போட்டியை திரளான பொதுமக்கள் மற்றும் கால்பந்து ரசிகர்கள்  கண்டு களித்தனர்.

Next Story