நாமக்கல் ஆண்டவர்நகரில் உயர்மின் அழுத்தத்தால் வெடித்து சிதறிய மின்சாதன பொருட்கள்


நாமக்கல் ஆண்டவர்நகரில் உயர்மின் அழுத்தத்தால் வெடித்து சிதறிய மின்சாதன பொருட்கள்
x
தினத்தந்தி 7 Sept 2021 12:16 AM IST (Updated: 7 Sept 2021 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் ஆண்டவர்நகரில் உயர்மின் அழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறின.

நாமக்கல்:
வெடித்து சிதறின
நாமக்கல் ஆண்டவர் நகர் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை நாமக்கல் நகரில் அதிக காற்றுடன் மழை பெய்தது. அப்போது அந்த பகுதியில் உள்ள மின்மாற்றியில் இருந்து செல்லும் மின்சார கம்பி மீது அரசு கேபிள் டி.வி. வயர் உரசியதாக கூறப்படுகறது. 
இதனால் ஏற்பட்ட உயர் மின் அழுத்தம் காரணமாக அந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்த டி.வி., வாசிங்மெஷின், குளிர்சாதன பெட்டி, கணினி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறின. இதனால் பொதுமக்கள் அலறி அடித்து வீட்டை விட்டு வெளியேறினர். இதுகுறித்து மின்வாரிய அலுவலர்களுக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-
பலமுறை புகார்
இந்த பகுதியில் உயர் மின்னழுத்தம் காரணமாக, வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் பழுதாகி உள்ளன. ஏற்கனவே மின் கம்பியும், கேபிள் டி.வி. வயரும் உரசி தீப்பிடிப்பதாக மின்வாரிய அலுவலகத்திற்கும், கேபிள் டி.வி. நிறுவனத்திற்கும் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, ஒரே நேரத்தில் பல வீடுகளில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான மின்சாதன பொருட்கள் சேதமாகி உள்ளன. எனவே, மின்வாரிய அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story