புதுக்கோட்டையில் 2 மாணவிகளுக்கு கொரோனா தொற்று
புதுக்கோட்டையில் 2 மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
புதுக்கோட்டை, செப்.7-
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள முள்ளங்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதற்கிடையே அந்த மாணவி படித்த பள்ளியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் 186 பேருக்கு கொரோனா மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
புதுக்கோட்டையில் ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவருக்கும் கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. இந்த இரு மாணவிகளும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். புதுக்கோட்டை, கறம்பக்குடி பள்ளிகளில் மாணவிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டபிறகும் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டன.
Related Tags :
Next Story