2 ஏக்கரில் பயிரிட்டு இருந்த கோரைப்புற்கள் தீயில் எரிந்து நாசம்


2 ஏக்கரில் பயிரிட்டு இருந்த கோரைப்புற்கள் தீயில் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 7 Sept 2021 12:39 AM IST (Updated: 7 Sept 2021 12:50 AM IST)
t-max-icont-min-icon

நொய்யல் அருகே 2 ஏக்கரில் பயிரிட்டு இருந்த கோரைப்புற்கள் தீயில் எரிந்து நாசமானது.

நொய்யல்,
விவசாயி
நொய்யல் அருகே மறவாபாளையத்தை சேர்ந்தவர் குமாரசாமி (50), விவசாயி. இவரது தோட்டம் அருகாமையில் உள்ளது. அதில் கோரைப்புல் பயிரிட்டு இருந்தார். நேற்று இரவு கோரைப்புற்களில் திடீரென தீப்பிடித்தது. பின்னர் மளமளவென எரிய ஆரம்பித்தது.இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குமாரசாமி அக்கம்பக்கத்தினரை அழைத்து தீயை அணைக்க முயற்சி செய்தார். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை.
கோரைப்புற்கள் எரிந்து நாசம்
இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு குமாரசாமி தகவல் தெரிவித்தார். இதன் பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். 
மேலும், மற்ற விவசாய தோட்டங்களுக்கு தீ பரவாமல் தடுத்தனர். இருப்பினும் 2 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கோரைப்புற்கள் தீயில் எரிந்து நாசமாயின.

Next Story