மின் கம்பி அறுந்து விழுந்ததில் மாடு சாவு


மின் கம்பி அறுந்து விழுந்ததில் மாடு சாவு
x
தினத்தந்தி 7 Sept 2021 1:32 AM IST (Updated: 7 Sept 2021 1:32 AM IST)
t-max-icont-min-icon

மின் கம்பி அறுந்து விழுந்ததில் மாடு செத்தது.

செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவர் தனது மாடுகளை வீட்டின் முன்புறம் கட்டி வைத்து இருந்தார். நேற்று முன்தினம் மாலை இடி, மின்னலுடன் பெய்த கனமழை காரணமாக, அவ்வழியே சென்ற மின் கம்பி அறுந்து மாட்டின் மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து மாடு பரிதாபமாக செத்தது. இது குறித்து செந்துறை போலீசார் மற்றும் சிறுகளத்தூர் கிராம நிர்வாக அதிகாரி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story