பெண்ணிடம் நகை பறித்த 3 பேர் கைது
பெண்ணிடம் நகை பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள ஓங்காரகுடில் ரோட்டை சேர்ந்தவர் பார்வதி(வயது 47). இவரது கணவர் தியாகராஜன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால் தனது மகன் சதீசுடன் வசித்து வரும் பார்வதி, வாடகைக்கு வீடு அமர்த்தி கொடுக்கும் தரகு வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 21-ந் தேதி அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஒருவர், தனக்கு வீடு வாடகைக்கு வேண்டும் என்று கேட்டுள்ளார். இதையடுத்து மறுநாள் ஒரு வாலிபரும், ஒரு பெண்ணும் வந்து பார்வதியுடன் ஓங்காரக்குடில் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டை பார்க்க சென்றுள்ளனர். கதவை திறந்து வீட்டிற்குள் சென்றபோது திடீரென்று பின்னால் வந்த மற்றொரு நபர் பார்வதியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, 8¼ பவுன் நகைகள் மற்றும் ரூ.500, செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு, பார்வதியை வீட்டிற்குள் தள்ளி தாழ்ப்பாள் போட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இது குறித்து பார்வதி கொடுத்த புகாரின்பேரில் துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தார். இந்நிலையில் நேற்று துறையூர் புறவழிச்சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் விதுன்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தி, சந்தேகப்படும்படியாக சென்ற 3 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் துறையூர் கண்ணபிரான் காலனியை சேர்ந்த சதீஷ்குமார்(30), பெரம்பலூர் வெங்கடேசபுரம் டவுன் பகுதியை சேர்ந்த பிரித்திகைவாசன்(25), திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த ரேணுகா(32) என்பதும், பார்வதியிடம் நகைகளை பறித்தது அவர்கள்தான் என்பதும், அந்த நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றியதும், சதீஷ்குமார், பிரித்திகைவாசன் மீது ஏற்கனவே பிற மாவட்டங்களில் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story