இறைச்சிக்காக கடத்திய 30 எருமை மாடுகள் மீட்பு; டிரைவர் கைது


இறைச்சிக்காக கடத்திய 30 எருமை மாடுகள் மீட்பு; டிரைவர் கைது
x
தினத்தந்தி 7 Sept 2021 2:44 AM IST (Updated: 7 Sept 2021 2:44 AM IST)
t-max-icont-min-icon

ஒசநகர் அருகே இறைச்சிக்காக கடத்திய 30 எருமை மாடுகள் மீட்கப்பட்டது. டிரைவர் கைது செய்யப்பட்டார்.

சிவமொக்கா: ஒசநகர் அருகே இறைச்சிக்காக கடத்திய 30 எருமை மாடுகள் மீட்கப்பட்டது. டிரைவர் கைது செய்யப்பட்டார்.

வனத்துறையினர் சோதனை

சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் தாலுகா உளிக்கல் மலைப்பாதையில் உள்ள சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக ஒரு லாரி வேகமாக வந்தது.  அந்த லாரியை வனத்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது லாரியில் வாய், கால்கள் கட்டப்பட்ட நிலையில் எருமை மாடுகள் இருந்து தெரியவந்தது. இதையடுத்து லாரி டிரைவரை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். 

30 எருமைகள் மீட்பு

இதனால் சந்தேகமடைந்த வனத்துறையினர், ஒசநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். இதையடுத்து ஒசநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரி டிரைவரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சிவமொக்காவில் இருந்து உடுப்பி மற்றும் மங்களூரு பகுதிகளுக்கு இறைச்சிக்காக மாடுகளை கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து லாரி டிைரவரை போலீசார் கைது செய்தனர். மேலும் லாரியுடன், கடத்தப்பட்ட 30 எருமை மாடுகளும் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட மாடுகள், கோசாலையில் விடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒசநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story