லஞ்சம் வாங்கிய மாநகராட்சி அதிகாரிக்கு 4 ஆண்டுகள் சிறை
நிலத்திற்கு பட்டா வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மாநகராட்சி அதிகாரிக்கு 4 ஆண்டுகள் சிறை விதித்து தார்வார் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
உப்பள்ளி: நிலத்திற்கு பட்டா வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மாநகராட்சி அதிகாரிக்கு 4 ஆண்டுகள் சிறை விதித்து தார்வார் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
ரூ.15 ஆயிரம் லஞ்சம்
உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி அலுவலகத்தில் நில பட்டா வழங்கும் பிரிவில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் சுரேஷ் பீமப்பா கொல்லர்(வயது 48). இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு 17-ந்தேதி உப்பள்ளியை சேர்ந்த தனியர் நிறுவன ஊழியர் ஒருவர், தனது நிலத்திற்கு பட்டா வாங்க மாநகராட்சி அதிகாரி சுரேஷ் பீமப்பாவிடம் விண்ணப்பித்தார்.
அப்போது மாநகராட்சி அதிகாரி சுரேஷ் பீமப்பா, அவரிடம் நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டுமானால் ரூ.15 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும என்று கேட்டுள்ளார். இதுபற்றி அவர், உப்பள்ளி ஊழல் தடுப்பு படை போலீசில் புகார் அளித்து இருந்தார்.
மாநகராட்சி அதிகாரி கைது
அந்த புகாரின் பேரில் ஊழல் தடுப்பு படை போலீசார், அவரிடம் ரசாயன பொடி தடவிய ரூ.15 ஆயிரத்தை கொடுத்து அதனை கொடுக்கும்படி சில அறிவுரைகள் கூறி அனுப்பினர். அதன்படி தனியார் நிறுவன ஊழியர், மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்று மாநகராட்சி அதிகாரி சுரேஷ் பீமப்பாவிடம் ரூ.15 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தார். அதனை சுரேஷ் பீமப்பா வாங்கி கொண்டார்.
இதனை மறைவாக நின்று கவனித்த ஊழல் தடுப்பு படை போலீசார் லஞ்சம் வாங்கிய சுரேஷ் பீமப்பாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
4 ஆண்டுகள் சிறை
இதுதொடர்பாக தார்வார் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி தீர்ப்பு கூறினார்.
அதில் நிலத்திற்கு பட்டா வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி அதிகாரிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story