சரக்கு ரெயிலில் சிக்கி டிரைவர் பலி


சரக்கு ரெயிலில் சிக்கி டிரைவர் பலி
x
தினத்தந்தி 7 Sept 2021 2:50 AM IST (Updated: 7 Sept 2021 2:50 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அருகே சரக்கு ரெயிலில் சிக்கி டிரைவர் பலியானார்.

சிவகாசி, 
சிவகாசி அருகே திருத்தங்கல் வடக்கு ரதவீதியை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது48). தனியார் நிதி நிறுவனத்தில் டிரைவராக வேலைபார்த்து வந்தார். இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை திருத்தங்கல் அருகே செங்கமலப்பட்டி கிழவன் பாலம் அருகில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு முத்துராஜ் ரெயில் பாதையில் நடந்து சென்றுள்ளார். அப்போது ராஜபாளையத்தில் இருந்து விருதுநகர் நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு ரெயிலில் எதிர்பாராமல் சிக்கி பலத்த காயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே முத்துராஜ் பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

Related Tags :
Next Story