வாலிபரை வெட்டிக்கொன்ற தாய்மாமா


வாலிபரை வெட்டிக்கொன்ற தாய்மாமா
x
தினத்தந்தி 7 Sept 2021 2:58 AM IST (Updated: 7 Sept 2021 2:58 AM IST)
t-max-icont-min-icon

திருச்சுழி அருகே தகராறு செய்த வாலிபரை வெட்டிக்கொன்ற தாய்மாமா போலீசில் சரண் அடைந்தார்.

காரியாபட்டி,
திருச்சுழி அருகே தகராறு செய்த வாலிபரை வெட்டிக்கொன்ற தாய்மாமா போலீசில் சரண் அடைந்தார். 
தாய்மாமனிடம் வாக்குவாதம் 
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள மடத்துப்பட்டியை சேர்ந்த பஞ்சவர்ணம் மகன் தீபாமணி (வயது36). இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. தீபா மணிக்கும், மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் தீபா மணியின் தாயார் லெக்கம்மாள் மரணம் அடைந்தார். 
இதையடுத்து நேற்று இரவு 3-ம் நாள் நிகழ்வு நடைபெற்றது. இதில் தீபா 
மணியின் அனைத்து உறவினர்களும் கலந்து கொண்டனர். அப்போது தீபாமணி தனது தாய் மாமன் மனோகரனிடம் (47) வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 
வாலிபருக்கு வெட்டு 
அப்போது அங்கிருந்த உறவினர்கள் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சித்தும் முடியவில்லை. 
மேலும் தீபாமணி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது ஆத்திரமடைந்த மனோகரன் அரிவாளால் தீபாமணியை கழுத்தில் வெட்டினார். 
இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்சுழி போலீசார் தீபாமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனோகரன் திருச்சுழி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். 

Next Story