சேலத்தில் கோஷ்டி மோதல்: வாலிபர் அரிவாளால் வெட்டிக்கொலை சிறுவன் உள்பட 3 பேருக்கு தீவிர சிகிச்சை


சேலத்தில் கோஷ்டி மோதல்: வாலிபர் அரிவாளால் வெட்டிக்கொலை சிறுவன் உள்பட 3 பேருக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 7 Sept 2021 3:09 AM IST (Updated: 7 Sept 2021 3:09 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் கோஷ்டி மோதலில் வாலிபர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மேலும் படுகாயம் அடைந்த சிறுவன் உள்பட 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேலம்
15 பேர் கொண்ட கும்பல்
சேலம் கிச்சிப்பாளையம் காளிக்கவுண்டர் காடு பகுதியை சேர்ந்தவர் குமரசேன். இவருடைய மகன் வினோத்குமார் (வயது 26). அதே பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடேசன் மகன் மணிகண்டன் (26), ஆறுமுகம் மகன் பிரதாப் (23), பிரகாசம் மகன் உதயகுமார் (17). இவர்கள் 4 பேரும் நேற்று இரவு காளிகவுண்டர் காடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி அருகே நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு 15 பேர் கொண்ட கும்பல் திடீரென்று வந்தனர். அப்போது அவர்களுக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. கண் இமைக்கும் நேரத்தில் 15 பேர் கொண்ட கும்பல் தாங்கள் கொண்டு வந்திருந்து கத்தி, வீச்சரிவாளால் அவர்களை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச்சென்று விட்டது. இதில் வினோத்குமார், மணிகண்டன், பிரதாப், உதயகுமார் ஆகிய 4 பேருக்கும் தலை, கை, கால், முகம் உள்ளிட்ட உடலில் பல இடங்களில் படுகாயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.
வாலிபர் சாவு
இது குறித்து தகவல் அறிந்த கிச்சிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 4 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதனிடையே நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி வினோத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 15 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இந்த மோதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே பலியான வினோத்குமார் மற்றும் காயம் அடைந்தவர்களின்  உறவினர்கள், நண்பர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். இதனால் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவின் நுழைவு வாயில் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் நேற்று இரவு சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story