சேலம் மாவட்டத்தில் புதிதாக 59 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் புதிதாக 59 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சேலம்
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 58 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று புதிதாக 59 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதன்படி சேலம் மாநகராட்சி பகுதியில் 7 பேர் பாதித்து உள்ளனர். எடப்பாடி, காடையாம்பட்டி, கொளத்தூர், மகுடஞ்சாவடி, தாரமங்கலத்தில் தலா ஒருவர், ஓமலூரில் 2 பேர், சங்ககிரி, சேலம் ஒன்றிய பகுதியில் தலா 3 பேர், வீரபாண்டியில் 4 பேர், நங்கவள்ளியில் 5 பேர், கொங்கணாபுரத்தில் 6 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசலில் தலா ஒருவர், பனமரத்துப்பட்டியில் 3 பேர் பாதித்து உள்ளனர். அதே போன்று நாமக்கல் மாவட்டத்தில் இருந்து சேலத்திற்கு வந்த 4 பேர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த தலா 3 பேர் உள்பட மாவட்டத்தில் நேற்று மொத்தம் 59 பேர் கொரோனாவால் பாதிப்படைந்தனர்.
Related Tags :
Next Story