மின்வாரிய ஊழியர் குடும்பத்திற்கு இழப்பீடு


மின்வாரிய ஊழியர் குடும்பத்திற்கு  இழப்பீடு
x
தினத்தந்தி 7 Sept 2021 3:12 AM IST (Updated: 7 Sept 2021 3:12 AM IST)
t-max-icont-min-icon

சாலை விபத்தில் பலியான மின்வாரிய ஊழியர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

விருதுநகர்,
அருப்புக்கோட்டை மீனாட்சிபுரம் தெருவைசேர்ந்தவர் சுவாமிநாதன் (வயது 23). இவர் கோவை மாவட்டம் நெகமம் பகுதியில் மின் வாரிய அலுவலகத்தில் கணக்கீட்டாளராக பணி செய்து வந்தார். கடந்த 16.5.2019-ந் தேதியன்று இவர் சூலூர் பகுதியில் செஞ்சேரி ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த லாரி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து இவரது மனைவி கவுசல்யா (21) இழப்பீடு கோரி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் பாரத வங்கி காப்பீடு நிறுவனம் கூடுதல் நீதிமன்றத்தில் ரூ.37 லட்சத்து 90 ஆயிரம் இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டது. இதனையடுத்து விருதுநகர் வட்ட சட்டப்பணிகள் ஆணையத்தலைவர் விருதுநகர் சார்பு நீதிபதி சதீஷ், கவுசல்யாவிடம் ரூ.37 லட்சத்து 90 ஆயிரத்திற்கான காசோலையினை வழங்கினார்.

Next Story