மாவட்ட செய்திகள்

9-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + 9th grade student commits suicide by hanging

9-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

9-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
பள்ளிக்கு செல்லவில்லை என பெற்றோர் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை.
செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த லட்சுமிபுரம் பாலசண்முகம் நகர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சிவசக்தி(வயது 14). இவர், அங்குள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.


கொரோனா பரவல் சற்று குறைந்து இருப்பதால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கடந்த 1-ந்தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது.

ஆனால் சிவசக்தி, சரியாக பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் விரக்தி அடைந்த சிவசக்தி நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘பேஸ்புக்’ அளித்த தகவலால் தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய போலீசார்
டெல்லியில் ரஜவுரி கார்டன் பகுதியை சேர்ந்த 43 வயது ஆண் ஒருவர், தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டார். தனது தற்கொலையை ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் நேரடியாக காண்பிக்க முடிவு செய்தார்.
2. காதலன் ஏற்காததால் அரசு ஆஸ்பத்திரியில் இளம்பெண் தற்கொலை
கணவர், 2 மகள்களை உதறிவிட்டு ராமநாதபுரம் வந்த இளம்பெண்ணை, காதலன் திருமணம் செய்ய மறுத்ததால், அந்த பெண் அரசு ஆஸ்பத்திரியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட விபரீத சம்பவம் நடந்துள்ளது.
3. நடிகை தற்கொலை... காதலனுக்கு தொடர்பா? - பிரேத பரிசோதனை அறிக்கையால் வெளிவந்த உண்மை
நடிகை சவுஜன்யா, கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி தன்னுடைய வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார்.
4. மகள் காதல் திருமணம் செய்ததால் தாய், தந்தை தற்கொலை
மகள் காதல் திருமணம் செய்ததால் விரக்தி அடைந்த தாய், தந்தை தற்கொலை செய்துகொண்டனர்.
5. உருக்கமான வீடியோ வெளியிட்டுவிட்டு தி.மு.க. நிர்வாகி தற்கொலை
சென்னை ராயப்பேட்டையில் தி.மு.க. நிர்வாகி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு மனைவியும், அவரது குடும்பத்தினருமே காரணம் என உருக்கமான வீடியோ வெளியிட்டுள்ளார்.