வங்கதேசத்தினர் 8 பேர் கைது
அவினாசி பகுதியில் சட்ட விரோதமாக தங்கி இருந்து பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்த வங்காளதேச நாட்டை சேர்ந்த 8 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவினாசி
அவினாசி பகுதியில் சட்ட விரோதமாக தங்கி இருந்து பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்த வங்காளதேச நாட்டை சேர்ந்த 8 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
வெளிநாட்டினர்
திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் அதிக எண்ணிக்கையில் பனியன் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். வெளிநாட்டை சேர்ந்தவர்களும் சட்ட விரோதமாக தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள்.
இந்த தகவல் போலீசாருக்கு தெரியவந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சென்று தொழிலாளர்களின் ஆவணங்களை ஆய்வு செய்து சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரை கைது செய்து வருகின்றனர்.
சமீபத்தில் திருப்பூர், மங்கலம், நல்லூர் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த வங்கதேச நாட்டினரை போலீசார் கைது செய்தனர்.
8 பேர் கைது
இந்த நிலையில் அவினாசி கருணைபாளையம் பகுதியில் வங்க தேச நாட்டை சேர்ந்தவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக அவினாசி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவினாசியை அடுத்த சின்னக்கருணை பாளையம் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வங்கதேச நாட்டை சேர்ந்த ஜாகீர் உசேன் வயது 23, அல்அமீன்29, லிட்டன் 30 பிப்லாப் ஹோசின் 23 ரிடோ யான் 23 ராணா சார் பிரசி 22, பல்புள் அகமத் 32 மற்றும் மோச்சின் 33 ஆகிய 8 பேர் சட்டவிரோதமாக தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது.
எப்படி
இவர்கள் பாஸ்போர்ட், விசா உள்பட எந்த ஆவணங்களும் இல்லாமல் கடந்த 6 மாதமாக சின்னக்கருணைபாளையம் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். போலீசார் அவர்கள் 8 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
இவர்கள் வங்கதேச நாட்டில் இருந்து எப்படி இந்தியாவிற்குள் வந்தார்கள், இவர்களுக்கு உதவியது யார் போலியான ஆதார்கார்டு வைத்துள்ளார்களா, உரிய ஆவணங்கள் இன்றி பனியன் நிறுவன உரிமையாளர் இவர்களை எப்படி வேலைக்கு சேர்த்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-------------------
Related Tags :
Next Story