தூத்துக்குடியில் சாலை பணியாளர்கள் போராட்டம்
தூத்துக்குடியில் சாலை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் நேற்று பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் ஏ.பழனிச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஏ.செம்புலிங்கம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் மா.சண்முகராஜா கலந்து கொண்டு பேசினார்.
போராட்டத்தில் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். தமிழக நெடுஞ்சாலைத்துறையில் காலியாக உள்ள 5 ஆயிரம் பணியிடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். உயிரிழந்த சாலைப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறையில் வேலை வழங்க வேண்டும். சீருடைப்படி, சலவைப்படி, விபத்துபடி, சைக்கிள் படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
போராட்டத்தில் சாலைப்பணியாளர்கள் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் இரா.அண்ணாத்துரை நன்றி கூறினார். தொடர்ந்து சங்கத்தினர் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story