பாரதீய மஸ்தூர் சங்க கொடியேற்று விழா


பாரதீய மஸ்தூர் சங்க கொடியேற்று விழா
x
தினத்தந்தி 7 Sept 2021 6:44 PM IST (Updated: 7 Sept 2021 6:44 PM IST)
t-max-icont-min-icon

நத்தத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு பாரதீய மஸ்தூர் சங்க கொடியேற்று விழா நடந்தது.

நத்தம்: 

நத்தத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு பாரதீய மஸ்தூர் சங்க கொடியேற்று விழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது. இதற்கு மாநில தலைவர் சிதம்பரசாமி தலைமை தாங்கி, சங்க கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட தலைவர் பாபுலால்ஜி முன்னிலை வகித்தார். 

பேரவை செயலாளர் பாலன் வரவேற்றார். இந்த விழாவில் மாநில பொதுச்செயலாளர் விமலேஸ்வரன், கிளை தலைவர் ரவிக்குமார், செயலாளர் குமார், பொருளாளர் கணேசன் மற்றும் பா.ஜ.க. சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story