கோம்பையில் வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டுயானைகள்
கோம்பையில் வாழை, தென்னை மரங்களை காட்டுயானைகள் சேதப்படுத்தின.
தேவாரம்:
தேவாரம், பண்ணைப்புரம், கோம்பை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து 3 காட்டு யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வந்தன. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் கோம்பை ரெங்கநாதபுரம் பகுதியில் உள்ள தோட்டத்துக்குள் 3 காட்டு யானைகள் புகுந்து வாழை மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தின. அத்துடன் தண்ணீர் செல்லும் குழாய்களையும் உடைத்து நாசம் செய்தன. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் வனத்துறையினர் பாதிக்கப்பட்ட இடங்களை வந்து பார்க்கவில்லை என்று விவசாயிகள் புகார் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தேவாரத்தில் ஒற்றை காட்டு யானையும் கோம்பை, பண்ணைப்புரம் பகுதியில் 3 காட்டு யானைகளும் தொடர்ந்து விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. எனவே காட்டு யானைகளை விரட்டுவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வனத்துறையினரை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
Related Tags :
Next Story