தூத்துக்குடியில் பி.எஸ்.என்.எல்.ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில் பி.எஸ்.என்.எல்.ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Sept 2021 8:12 PM IST (Updated: 7 Sept 2021 8:12 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

தூத்துக்குடி:
அகில இந்திய பி.எஸ்.என்.எல் ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் தூத்துக்குடி பி.எஸ்.என்.எல் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க ஆலோசகர் டி.கே.சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பி.ராமர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், முடக்கப்பட்ட பஞ்சப்படியை வழங்க வேண்டும், பி.எஸ்.என்.எல் ஓய்வூதியர்களுக்கு 1.1.2017 முதலான ஓய்வூதிய மாற்றத்தை வழங்க வேண்டும். மருத்துவ படியை மாதம் தோறும் வழங்க வேண்டும். கொரோனா மருத்துவ செலவு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் ராமர் உள்பட ஓய்வூதியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story