விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 7 Sept 2021 8:15 PM IST (Updated: 7 Sept 2021 8:15 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே விஷம் குடித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

வேடசந்தூர்: 

வேடசந்தூர் அருகே உள்ள கெண்டையகவுண்டனூரை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மனைவி ரேவதி (வயது 24). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். ரேவதிக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த சில நாட்களாக கெட்டியபட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் மகனுடன் தங்கி இருந்தார். அங்கு இருந்து மருத்துவமனைக்கு சென்று அவர் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து ரேவதி மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ரேவதி உயிரிழந்தார். 

இதுகுறித்து எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யபிரபா வழக்குப்பதிவு செய்து, அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து  விசாரணை நடத்தி வருகிறார். ரேவதிக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால், திண்டுக்கல் ஆர்.டி.ஓ. காசி செல்வி விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story