சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநிலக்குழு உறுப்பினர் துரைப்பாண்டி தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட தலைவர் தாரகை, செயலாளர் வேல்முருகன், பொருளாளர் கார்மேகம், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜோதிமுருகன் மற்றும் நிர்வாகிகள், சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும். மேலும் இறந்த பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வாரிசு வேலை, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புதல், புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும் கோரிக்கைகள் தொடர்பாக அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story